ஜெ. உயிருடன் இருக்கும்போதே சதித்திட்டம்!- ஓபிஎஸ்!

ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே முதல்வராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

OPS_long_11106நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதலமைச்சர் பழனிச்சாமி, துணைமுதல்மைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது எம்ஜிஆரின் பெருமைகள் குறித்தும் அதிமுகவின் வளர்ச்சி குறித்தும் பேசிக்கொண்டிருந்த துணைமுதலமைச்சர், அதோடு சேர்த்து தினகரனின் பெருமைகள் குறித்தும் பேசினார்.

அப்போது, “டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க-வின் வரலாறு தெரியவில்லை. அவர்தான் என்னை அம்மாவிடம் அழைத்துக்கொண்டு போனதாக கூறுகிறார். அவர் 1999-ம் ஆண்டு தான் நாடாளுமன்ற உறுப்பினரானார். ஆனால் நான் அதற்கு முன்னதாகவே 19 வருடங்களாக அதிமுகவின் வார்டு பிரதிநிதியாக இருந்தேன். அதிமுகவில் சேர்ந்து எனக்கு 19 வயது ஆன போது தான் தினகரன் பெரியகுளத்திற்கு எல்.கே.ஜி படிக்க வந்தார்.

2008-ம் ஆண்டிலே மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தினகரனை அழைத்த ஜெயலலிதா பெரியகுளம் தொகுதிக்குள்ளும், நாடாளுமன்றத்திலும் நுழையக்கூடாது என கூறி அனுப்பிவிட்டார்.

2014-ம் ஆண்டு ஜெயிலுக்கு சென்று திரும்பிய ஜெயலலிதா 16 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். பின்னர் சசிகலா மன்னிப்பு கடிதம் எழுதியதால் தான் அவரை சேர்த்துக் கொண்டார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் டிடிவி நாங்கள் அசந்த நேரத்தில் வெற்றி பெற்றார். இனிமேல் எந்த தொகுதியிலும் நாங்கள் அசர மாட்டோம். காளை மாடு கூட கன்று போடும் ஆனால் டிடிவி தினகரன் இனி வெற்றி பெற முடியாது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.