அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மோசமான குளிரான காலநிலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால நிலையை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடாவின் பெருமளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் கொட்டும் பனியினால் நகரங்கள் வெள்ளைக்கம்பளம் போர்த்தப்பட்டிருப்பது போன்று காணப்படுகிறது.
அமெரிக்காவின் மினசோட்டா நகரில் மைனஸ் 38 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு கொதி நீர் கூட பொது வெளியில் நேரதாமதமின்றி பனிக்கட்டியாக மாறிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான காணொளிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
பென்சில்வேனியாவின் எரீ நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் இருந்து பனி மழை பொழிந்து வருகிறது.
இதனால் அங்குள்ள வீதிகளில் 5 அடி உயரம் வரை பனி கொட்டிக் கிடக்கிறதாகவும், இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணிகளை அந்நாட்டு தேசிய பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இந்த கடும் குளிரினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளதுடன், அண்டார்டிக்காவிலிருந்து அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி கடும் குளிர் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








