200 வருட பழமைவாய்ந்த மரத்தை அகற்றுமாறு உத்தரவிட்ட ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மாளிகையான வெள்ளை மாளிகைக்கு முன்னால் 200 ஆண்டுகளாக உள்ள மரம் ஒன்றை அகற்றுமாறு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.ஜெக்சன் மக்னோலியா என்று அழைக்கப்படும் இந்த மரம், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி அன்று ஜக்ஷன்னினால் நடப்பட்டது. அவரது மனைவியின் நினைவாக இந்த மரம் நடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மரத்தின் படம், 1928ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் 20 டொலர் நாணயத் தாளிலும் அச்சிடப்பட்டிருந்தது.200 வருடங்களாக இருக்கும் இந்த மரம் தற்போது பாதுகாப்பு பிரச்சினையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.குறித்த மரம் சிதைவடைந்திருப்பதாகவும், இந்த பகுதியிலேயே செய்தியாளர் சந்திப்புகள் இடம்பெறுவதால், செய்தியாளர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியும் அதனை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலானியா ட்ரம்ப் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.இதனை அடுத்து குறித்த மரம் இன்று அகற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.