நடிகை நயன்தாராவின் மூன்றாவது காதல் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படம் மூலம் இருவருக்கு காதல் வந்தது. மேலும் காதலிப்பதை உறுதிப்படுத்த இவர்கள் இருவரும் இணைந்தே அனைத்து இடங்களுக்கும் சென்று வந்தனர்.
அனைத்து டிவி விழாக்களுக்கு கூட இருவரும் இணைந்ததே தான் சென்று வந்தனர். இவர்கள் இருவரும் அவர்களது காதல் குறித்து உறுதி செய்யாவிட்டாலும், கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் பல படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை ஒரு செல்பியுடன் டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்த புகைப்படத்தில் நயன்தாரா நிறையவே வெட்கப்பட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பகிர்ந்ததோடு நயந்தாராவை வாழ்த்தியும் உள்ளார் விக்னேஷ்.






