பயங்கரவாத குழுக்களில் காஷ்மீர் இளைஞர்கள் இணைந்து கொள்வதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும் அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் இளைஞர்களை தொடர்ந்து இணைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.இந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு காஷ்மீர் பயங்கரவாத இயக்கத்தில் 88 இளைஞர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தெற்கு காஷ்மீரை சேர்ந்த கூடியளவு இளைஞர்கள் லஷிர் இ தொய்பா,ஹீபுல் முஜாஹீதின் போன்ற அமைப்பக்களில் சேர்ந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இந்த வருடம் நவம்பர் மாதம் வரை 117 ற்கு மேற்பட்ட இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புக்களில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை பயங்கரவாத அமைப்புக்களில் சேர்ந்துள்ள இளைஞர்களின் விபரங்கள் எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் இவை யாவும் கொடுக்கப்படும் புகார்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






