கொழும்பு – புறக்கோட்டை பகுதிக்குள் நுழைவோர் அவதானம் !!!

கொழும்பு – புறக்கோட்டை பகுதிக்கு பொருள் கொள்வனவிற்காக வரும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு புறக்கோட்டை பொலிஸார் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர்.

sdsd1பண்டிகை காலங்களில் புறக்கோட்டை நகர் புறத்தில் ஆடை, ஆபரண கொள்வனவு மற்றும் பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் கொள்ளையடிப்பதற்காக பெண்கள் குழு ஒன்று கொழும்பில் ஊடுறுவி இருப்பதால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு மேலும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

20 மற்றும் 50 வயதிற்குட்பட்ட 30ற்கும் மேற்பட்ட குறித்த கொள்ளை கும்பல் விதம் விதமாக ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு குழுவாக பிரிந்து மக்களிடம் மிக நுட்பமான முறையில் கொள்ளை அடித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொள்ளை கும்பலில் சிலர் புறக்கோட்டை பகுதியில் சாரி மற்றும் மிகவும் லாபமாக ஆடை விற்பனை செய்யம் இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடி நிற்கும் இடங்களுக்குச் சென்று மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவதாகவும்,

சிலர் டெனிம் காற்சட்டை மற்றும் டீசேர்ட் அணிந்து கொண்டு பயணிகள் அதிகம் பயணிக்கும் பஸ்களில் ஏறி ஆண்களின் உடலோடு சாய்ந்து உரசி அவர்களது பணப்பைகளை கொள்ளையடிப்பதாகவும்,

மேலும் சிலர் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மக்கள் அதிகம் கூடியிருக்கும் இடங்களுக்குச் சென்று சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கும் பஞ்சாயுதம் மற்றும் தங்க சங்கிலிகளை மிகவும் நுட்பமாக அறுத்துக் கொண்டு செல்வதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப் பண்டிகை காலத்தில்  புறக்கோட்டை நகர் புறத்தில் மட்டும் வெவ்வேறு குற்றச் செயல்களோடு தொடர்பு பட்ட சந்தேக நபர்கள் 10 பேர் கைது செய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.