2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்திற்கு முன்னர் 5,000 ஏக்கர் நிலங்களுக்கு மேல் விடுதலைப்புலிகள் தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கேப்பாப்புலவு, பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில் அப்பகுதி இராணுவ அதிகாரி ஒருவர் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
2009ஆண்டிற்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பயிற்சி பாசறைகள், நிர்வாக கட்டங்கள் உள்ளிட்ட பல முகாம்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கர் நிலங்களை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், இறுதி யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் மீதான பாரிய தாக்குதல்களின் மூலம் குறித்த முகாம்களை இராணுவத்தினர் கைப்பற்றினர்.
அவற்றுள் சில ஏக்கர் காணிகள் பொதுமக்களின் காணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்க இராணுவத்தினர் என்றும் முழு ஒத்துழைப்புடன் செயற்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.