உங்களின் ஆயுட்காலம் எவ்வளவு? தெரிந்துக் கொள்ளலாம்

மூச்சு விடுதல், சுவாசித்தல் என்பது தினமும் அனிச்சையாக செய்யும் செயல்களில் ஒன்று, இவை இரண்டும் தானாகவே, தடைகளின்றி நடந்து வரும்.

நம் உடல் உறுப்புகள் இயங்கும். சுவாசத்திற்கு அடிப்படையான காற்று, மூக்கின் வழியே உள்ளே இழுக்கப்பட்டு, தொண்டை வழியே, நுரையீரலை சென்றடைகிறது.

பின் நுரையீரல் தன்னுள்ளே வரும் காற்றை, அதன் நுண்ணிய காற்றுப் பைகளுக்கு அனுப்பி, ஏற்கெனவே உள்ள சுத்திகரித்த பின் எஞ்சிய காற்றை, திருப்பி மூச்சின் வழியே வெளியேற்றம் செய்கிறது.

இவ்வாறு நடைபெறும் சுவாச நிகழ்வில் ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மூச்சு விடுகிறோம் என்பதை வைத்து ஆயுட்காலத்தை கூறி விடலாம்.

ஆயுட்காலத்தை கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு நிமிடத்துக்கு சராசரியாக 15 என்ற அளவில் சுவாசித்தால் 100 ஆண்டுகள் வரை வாழலாம், என்று சித்தர்கள் உரைத்துள்ளனர்.

ஒரு நிமிடத்திற்கு 18 முதல் 20 என்ற அளவில் சுவாசித்தால், 70 ஆண்டுகள் முதல் 80 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம்.

மூச்சு எண்ணிக்கை குறையக் குறைய, உடல் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம் அதிகரிக்கும்.

சுவாசத்தை எப்படி வெளிவிட வேண்டும்?

மூச்சை உள்ளிழுத்து, அதில் 3 மடங்கு நேரம் உள்ளே அடக்கிய பின் ஒரு மடங்கு நேரத்தில் மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும். இவ்வாறு சுவாசிக்கும் முறையே பிரணாயாமம் என்று கூறப்படுகிறது.

இதனால் காற்றில் உள்ள சக்தி அதிக அளவில் உடலில் சேகரிக்கப்படுகிறது, உடலில் தேங்கும் பிராண சக்தியே, மனதின் ஆற்றலை அதிகரிக்கிறது.

இதன்மூலம், லட்சியங்கள், குறிக்கோள்கள், சிந்தனைகள் போன்ற எதிர்கால திட்டங்களை அடையும் வல்லமைகளை விரைவில் பெற முடியும்.