வவுனியா வேப்பங்குளத்தில் மோட்டாா் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்!

வவுனியா வேப்பங்குளம் 5ம் ஒழுங்கைக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் மூவா் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

குறித்த விபத்து சம்பவம் இன்று(16) காலை சம்பவித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

5a34a37fc82a0-IBCTAMILகுறித்த விபத்து தொடா்பில் தெரியவருவதாவது….

மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 67 வயதுடைய முதியவரொருவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய பெண்ணும் அவரது 5 வயதுடைய மகளும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த விபத்து தொடா்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டபோதிலும் ஒரு மணி நேரம் கடந்தும் பொலிஸாா் சம்பவ இடத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.