பிரித்தானிய 2ம் இளவரசர் ஹரி தனது திருமண தேதியை நேற்று(15) அறிவித்துள்ளார். இவர் அமெரிக்க ஹலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான மெகான் மார்கிளை மணம் முடிக்க உள்ளார். இன் நிலையில், தமிழ், ஹிந்தி திரைப்பட துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து. பாலிவுட்டில் இருந்து அமெரிக்க ஹாலிவுட் வரை சென்றவர் பிரியங்கா சோப்பிரா. அவரது நெருங்கிய நண்பி தான் மெகான் மார்கிள். இதனால் தனது திருமணத்திற்கு, பூ செண்டு கொண்டுவரும் தோழியாக. அல்லது அருகில் நிற்க்கும் தோழியாக பிரியங்காவை அவர் தெரிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஊடகங்களில், இளவரசர் ஹரி மற்றும் மெகான் மார்கிள் திருமணம் தொடர்பாகவே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. இன் நிலையில் இவர்களின் திருமணத்திற்கு அழைக்கப்பட உள்ள பிரமுகர்கள் பட்டியலில் முன் நாள் அமெரிக்க அதிர்பர் ஓபாமாவின் பெயரும் உள்ளது. அப்படியான பெரும் பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில், இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், பிரியங்கா சோப்பிரா கலந்துகொள்வது அனைத்து இந்தியர்களுக்கும் உச்சாகம் ஊட்டும் செய்தியாக உள்ளது. ஏன் எனில் இன் நிகழ்வில் இந்தியப் பிரதமர் நினைத்தால் கூட கலந்துகொள்ள முடியாது என்பது அனைவரும் அறிந்த விடையம்.
மிக எழிமையாக நடக்கவுள்ள இன் நிகழ்வில் பிரித்தானிய மகா ராணி பங்குபற்றுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் நடக்கவுள்ள கிருஸ்மஸ் தின கொண்டாட்டத்தில் பிரித்தானிய மகாராணி தனது குடும்பத்தோடு இரவு உணவு உட்கொள்ள உள்ளார். அன்றைய தினம், அனைத்து ராஜ குடும்பத்தினரும் அதில் கலந்துகொள்ள உள்ள நிலையில். ராஜ குடும்ப அந்தஸ்து இல்லாத(தற்போது) காதலியான மெகான் மார்கிள் இதில் கலந்துகொள்ள உள்ளர். இதற்கு மகாராணி பச்சைக் கொடி காட்டிவிட்டார் என்ற செய்தியும் அதிர்ச்சியான விடையம் தான். பல நூறு ஆண்டு வரலாற்றில் இப்படி ராஜ குடும்பம் அல்லாத நபர்கள் இந்த விருந்தில் கலந்து கொள்வது இல்லை.
2018 மே மாதம் 19 திகதிக்குப் பின்னர் மெகான் மார்கிள், ராஜ குடும்ப அந்தஸ்தை பெறுவார். இருப்பினும் அவருக்கான பாதுகாப்பு ஏற்கனவே அதிகரிக்கப்பட்டு விட்டது. சீக்கிரன் சேர்விஸ் பொலிசார், மற்றும் ராஜ குடும்ப பாதுகாப்பு பிரிவினர் சிவில் உடையில் அவருக்கு பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.






