கொளத்தூர் நகைக்கடை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட காவல் ஆய்வாளரின் உடலுக்கு நடிகர் கார்த்திக் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 16-ம் தேதியன்று சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில், கடையின் மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்த திருடர்களை பிடிப்பதற்காக 6 பேர் கொண்ட தமிழக போலீசார் குழு ராஜஸ்தான் விரைந்தது. அங்கு கைதியை பிடித்து காரில் ஏற்ற முற்படும்போது கொளத்தூர் காவல் ஆய்வாளரின் துப்பாக்கியை எடுத்து அவரையே நாதுராம் என்ற குற்றவாளி சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே ஆய்வாளர் பெரியபாண்டி வீர மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் அறிந்து பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று அவரது உடல் 20 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஆய்வாளர் பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தீரன் பட நடிகர் கார்த்திக் சென்றிருந்தார். அங்கு அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.






