நேபால் நாட்டில் இடதுசாரிகள் ஆட்சி… புதிய உதயம்… புதிய நம்பிக்கை

5a2f78b667212-IBCTAMILநேபால் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி முன்னணி வெற்றிபெற்றுள்ளதை தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் கே.பி.சர்மா ஓளி பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். நேபாள நாடாளுமன்ற தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி மற்றும் டிசம்பர் 7ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தமுள்ள 275 இடங்களில் இடதுசாரி முன்னணி கூட்டணி 117 இடங்களை கைபற்றியுள்ளது. இதில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி 81 தொகுதிகளையும், மாவோயிஸ்ட் மையம் 36 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 1950 ஆண்டு தொடங்கப்பட்டு தொடர்ந்து ஆட்சியில் இருந்த நேபால் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியை இழந்துள்ளது.

இடதுசாரி கோட்பாடுகளை பின்பற்றும் கட்சிகள் முன்னதாக சர்மா ஒளி தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைந்துகொண்டது. மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக நிலவிவந்த எதிர்ப்பு மனநிலை இடதுசாரியம் பேசும் கட்சிகளுக்கு வெற்றியை தேடிதந்துள்ளது. பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் இந்தியாவை நம்பியுள்ள நேபால்,  புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வரும்காலங்களில் தனக்கான தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்கி கொள்ளும் என்றே தெரிகிறது.