ஆடாத ஆட்டமா ஆடினான்..? தமிழகத்தை உலுக்கிய சைக்கோ கொடூரனுக்கு சற்று முன் மும்பையில் நேர்ந்தது..?

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினி திடீரென காணாமல் போனார்.

விளையாடச் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையில் ஹாசினியை அவரது பக்கத்து வீட்டில் வசித்த தஷ்வந்த் என்ற இளைஞரே கடைசியாக அழைத்துச் சென்றது உறுதியானது. இதன் அடிப்படையில் தஷ்வந்த்திடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

14-1505375485-hasini-case345இதில், தஷ்வந்த் ஹாசினியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரியவந்தது.

http://img.seithipunal.com/large/large_hasinidasyant-3113.jpg

சிறுமி கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீஸார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.

கடந்த வாரத்தில் குன்றத்தூர் வீட்டில் தாய் சரளாவைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தஷ்வந்த் கடந்த 2-ம் தேதி மாயமானார்.

செலவுக்குப் பணம் கொடுக்காததால், தாயை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தஷ்வந்த தலைமறைவானதாக அவரது தந்தை சேகர் போலீஸில் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து நகைகளுடன் தலைமறைவான தஷ்வந்தை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில், கடந்த 5 நாள்களாகத் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை மும்பையில் தமிழக போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தஷ்வந்தை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தமிழகம் அழைத்து வரும் வேலைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.