தலையில் விழுந்த பேரிடி…….. : குஷியில் அதிமுகவினர்!

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் தீர்ப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் டிசம்பர் 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.

கடந்த 2004 முதல் 2014ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது.

2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தாக்கல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ கடந்த 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இதனையடுத்து கடந்த ஆறு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து தீர்ப்பை தயாரிக்கும் பணி நடைபெற்றது.

இந்த வழக்கானது தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்து என்பதால், அதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேர்த்து தீர ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதால், இந்த வழக்கை விசாரித்துவரும் ஒ.பி.ஷைனி ஓய்வு இன்றி தீர்ப்பு எழுதும் பணியில் மிகத் தீவிரமாக பணியாற்றுவருவதாக தகவல்கள் வந்தன.

இதுவரையில் சுமார் 6 முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுவந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 21-ம் தேதி 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஷைனி இன்று தெரிவித்தார்.

இந்த 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கும் டிசம்பர் 21-ம் தேதி தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் பரபரப்போடு 2ஜி முறைகேடு வழக்கின் தீர்ப்பும் சேர உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அன்றே 2ஜி வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட இருப்பது, தி.மு.கவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுகள், அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை தி.மு.க எம்.பி கனிமொழி ஆகியோர் தான்.

இதனால் இந்த தீர்ப்பு, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எதுவும் பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற கலக்கம் தி.மு.கவினரிடையே நிலவுகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அன்றே 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் தீர்ப்பும் வழங்கப்பட உள்ளதால் அதிமுகவினரின் மகிழ்ச்சி தற்போது இரட்டிப்பாகியுள்ளது.