நுவரெலியா நகர கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்படும் கற்பக விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று(03) நடைபெற்றது.
அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆலயத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்ததுடன் இந்து சமய கலாச்சார அலுவலக திணைக்களத்தின் ஆலய பதிவுக்கான சான்றிதழையும் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கினார்.
குறித்த வைபவத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.