கோவையிலேயே முடிந்தது அதிமுகவின் கதை..

தமிழக அரசு சார்பில், கோவையில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

கடந்த வாரம் ரகு மரணம், பேனர் சர்ச்சை, ஒகி புயல் இப்படி பல்வேறு விவகாரங்களுக்கு மத்தியில் இந்த விழா நடந்து முடிந்தது.

large_amma-7591-3164தமிழகத்தில் மற்ற ஊர்களில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை விட, தடபுடல் ஏற்பாடுகளுடன் கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்து முடிந்தது.

திரும்பிய பக்கம் எல்லாம் விதிமுறைகளை மீறிய பேனர், கட் அவுட்கள், போக்குவரத்து மாற்றம் என்று நாலாப் பக்கமும் மக்களை அவதிக்குள்ளாக்கியது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்.

இந்நிலையில், இன்று நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

இதற்காக தனது வீட்டு வளாகத்தில் கோவை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து வரும் ஆட்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டும், சாராயம் அடங்கிய பெட்டிகளையும் எம்எல்ஏ கனகராஜ் விநியோகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

பிராந்திகள் அடைக்கும ஒரு கருப்பு பெட்டியை ஒருவர் தூக்கி செல்வது காணொளியில் தெரிகின்றது.

பெட்டி கிடைக்காமல் பிராந்தி கடையில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து வந்து விட்டார்கள் என எம்எல்ஏ இதற்கு விளக்கம கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து நான் டீசலுக்கு தான் பணம் கொடுத்தேன், பெட்டியில் புளிச்சோறு தான் இருந்தது என்று அந்த வீடியோ குறித்து எம்எல்ஏ கனகராஜ் விளக்கம் அளித்தாலும், தற்போது வரை பல இலட்சகணக்கான மக்கள் பார்த்து விட்டதால், அதன் உண்மை தன்மையை புரிந்து கொண்டனர்.

கோவையில் வெகு சிறப்பாக கொண்டாட நினைத்த விழா இறுதியில் இப்படி முடிந்திருப்பது. அதிமுகவினரை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.

எம்எல்ஏ கனகராஜ் கட்டு கட்டாக நாட்டாமை போல பணத்தை அள்ளி வீசும் காட்சியை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.