அம்மாவை பார்க்க முடியாது..உடைந்து போன மகன்: எழுதிய உருக்கமான கடிதம்!

பிரித்தானியாவில் 6 வயது சிறுவன் தாய் இறந்த செய்தி கேட்டவுடன் நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன் அம்மா என்று கடிதம் எழுதியிருக்கிறான்.

பிரித்தானியாவின் Wales பகுதியில் இருக்கும் Bridgend பகுதியைச் சேர்ந்தவர் Jessica Cowdery(26), இவர் தனது கணவனை பிரித்து வாழந்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஐந்து வாரங்களுக்கு முன்னர் Bipolar disorder காரணமாக Jessica Cowdery உயிரிழ்ந்துவிட்டார்.

இவரின் இறந்த செய்தியை அவரது 6 வயது மகனான Leo-விடம் உன் அம்மாவை பார்க்க முடியாது என்று கூறிய போது, அவன் கடிதத்தில் குறிப்பிடுவது போல், அனுப்புநர் Leo எனவும் பெறுநர் அம்மா என்று குறிப்பிட்டு நான் உங்களை மிகவும் விரும்புகிறேன் அம்மா என்று குறிப்பிட்டிருந்தான்.

இதை Jessica Cowdery நண்பர் Sarah Tristram புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தற்போது Leo அவரது தாயார் இல்லாமல் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடவுள்ளான், அதற்காக நிதி திரட்ட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் Jessica Cowdery ஒரு அருமையான தோழி, தனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் தோழியாக கிடைத்தாள், Leo-விடம் நான் அங்கும் இங்கு ஓடி ஆடி விளையாடியிருக்கிறேன், திடீரென்று அவள் இறந்த செய்தியை கேட்டவுடன் அதிர்ச்சியடைந்தேன்.

Leo-விற்கு நான் உதவி செய்ய விரும்புகிறேன், கிறிஸ்துமஸ் தினம் வரப் போகிறது, அதுமட்டுமின்றி அவனை விட்டு விலக நான் விரும்பவில்லை, அவனுக்கு உதவியாக நான் எப்போதும் இருப்பேன் அவனுடைய அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன், அதற்காக நிதி திரட்ட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.