ரிவியில் இருந்து துரத்திவிடப்பட்ட தொலைகாட்சித் தொகுப்பாளர், மோனிகா …

தமிழக மக்களின் மனதில் நின்ற பிரபல தொலைகாட்சித் தொகுப்பாளர், மோனிகா தற்போது முதலாளி ஆகியுள்ளார்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் வானிலை செய்தியை வாசித்து வந்தார் மோனிகா… பொதுவாகவே செய்திகள் வாசிப்பதாக இருந்தாலும் திரையில் உள்ள வார்த்தையை அப்படியே பார்த்துப் படிப்பதை விட, அந்த செய்தியை உள்வாங்கி தீவிரமாக அலசி ஆராய்ந்தே செயல்படுவார்.

30-1406724592-monica-1-600ஜெ மறைவிற்கு பின் தமிழக அரசியலையும் , குறிப்பாக பன்னீர் செல்வம் அணியையும், எடப்பாடியுடன் இணைந்த பின்பு துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் நிலையையும் தினகரன்… தீபா … என யாரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் அக்கு வேறு ஆணி வேறாக பேசினார்.

தற்போது தனியார் ரிவியில் தனது திறமையினை வைத்து வேலைக்கு சென்ற மோனிகாவை ஒரே நாளில் வேலையை விட்டு விரட்டிவிட்டார்களாம். காரணம் எந்த அரசியல் கட்சித் தலைவரை எப்படி பேச வேண்டும் என்பது தெரியாததே ஆகும்.

தற்போது வேலை கிடையாது என தூக்கிப் போடப் பட்டவர்கள் மத்தியில் தானே ஒரு ஊடகத்தினை உருவாக்கி அதில் முதலாளியாக வலம் வருகிறார் மோனிகா. தற்போது எந்தக் கட்சியாக இருந்தாலும் அரசியல் தலைவர்களை கழுவி கழுவி ஊற்றி வருகிறார்.