இளம் நடிகருக்கு சிம்பு செய்த உதவி- சந்தோஷத்தில் படக்குழு

நடிகர் பாண்டியராஜ் அவர்களின் மகன் ப்ருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் தொட்ரா. வீணா நாயகியாக நடிக்கும் இப்படத்தை மதுராஜ் இயக்க உத்தமராஜா இசையமைக்கிறார்.

CQXoFHFUsAEoGjz_17379

இசையமைப்பாளர் படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என ப்ருத்விராஜிடம் கூறியிருக்கிறார். இதனால் அவர் உடனே சிம்புக்கு ஒரே ஒரு போன் போட்டு விஷயத்தை கூற, அடுத்த நொடியே பாடல் வரிகளை அனுப்புங்கள் என்று பதில் கொடுத்திருக்கிறார்.

பாடலும் சிம்புவுக்கு பிடித்து போக உடனே வந்து பாடலை பொறுப்பாக பாடி கொடுத்துள்ளார்.

சிம்பு புதிய கலைஞர்கள் என்று பார்க்காமல் உடனே வந்து பாடிக் கொடுத்தது படக்குழு அனைவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக இசையமைப்பாளர் கூறியுள்ளார்.