வட இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை திருடப்பட்ட காரொன்று வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த விபத்துத் தொடர்பாக மேலதிக தகவலை பொலிஸார் வெளியிட மறுத்துள்ளனர்.