மனிதர்கள் செல்வதற்கே பயப்படும் மிகவும் ஆபத்தான இடங்கள்!

உலகம் முழுவதும் ஏராளமான அற்புதங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பார்க்கவே அச்சம் கொள்ள வைக்கும் பல இடங்கள், உலகின் பல்வேறு மூலைகளில் காணப்படுகின்றன, அப்படிப்பட்ட இடங்கள் பற்றி தான் பார்ப்போம்.

வாடிகன்(வாடிகன் ரகசிய கோப்புகள்)

கதீட்ரல், அரண்மனைகளால் நிரம்பிய நிற்கும் ஊர் வாடிகன். இங்குள்ள தேவாலயங்களில் மிக ரகசியமான கோப்புகள், மாநில தாள்கள், கணக்குப் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவை யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்ட ரகசிய இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு செல்வது மிகவும் ஆபத்தான செயல் என்றே கூறப்படுகிறது.

ஐஸ்லாந்து(சுர்ட்சே)

ஐஸ்லாந்தின் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ளது சுர்ட்சே, எப்போது வேண்டும் என்றாலும், வெடிக்கும் நிலையில் உள்ள இந்த எரிமலையை விஞ்ஞானிகள் மட்டுமே ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

ரஷ்யா(மெட்ரோ 2)

பழங்காலத்தில் குகைகள் ரகசிய வழித்தடங்களாகவும், பதுங்கு பகுதிகளாகவும் இருந்துள்ளன. தற்போது ரஷ்யாவிலும் அதுபோன்ற குகைகள் உள்ளன.

மெட்ரோ 2 எனப்படும் ரகசிய பாதை, மாஸ்கோவின் அதிகாரப்பூர்வ ரகசியப் பகுதியாகும். இதற்கு கோட் நேம் டி-6 என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் அரசியல், நிர்வாக பாதுகாப்பிற்காக கட்டப்பட்டது.

பிரேசில்(பாம்புகளின் தீவு)

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளின் உறைவிடமாக இந்த தீவு திகழ்கிறது. மனிதனின் உடலையே உருக வைக்கும் கோல்டன் லேன்ஸ்ஹெட் வைபர் பாம்புகளும் இங்கு உள்ளன.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தீவுக்குள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா (நியூ மெக்சிகோ)

மனித-விலங்கு கலப்பு, மனித ஏலியன் கலப்பு உயிரினங்கள் இங்கு இருப்பதாக கூறப்படுவதால், இதற்கு பயந்தே யாரும் இங்கு வருவதில்லை.

சீனா(குயின் ஷி ஹூங் கோட்டை)

சீனாவின் முதல் பேரரசின் கோட்டை இதுவாகும், குயின் முடியரசின் நிறுவனர் குயின் ஷி ஹூங்கால் உருவாக்கப்பட்டது. யாராலும் நுழைய முடியாத வகையில் மிகவும் ஆபத்து நிறைந்து காணப்படுகிறது.

இந்த கோட்டை மிகவும் சிக்கலான கட்டடக் கலையைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இறந்து ஆத்மாவாக மாறிய பிறகும் தேவைப்படும் பொருட்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.