நடிகர் நிவின் பாலியின் ரிச்சி படம் டிசம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ்..?

நடிகர் நிவின் பாலியின் ரிச்சி படம் டிசம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ்..?

மோலிவுட் பிரபல நடிகர்கள் நிவின் பாலி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவருக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களுக்கும் தமிழகத்தில் முன்னணி ஹீரோவாக வளம் வர ஆசை உள்ளது. இவர்களின் மலையாள படம் கூட தமிழ் படம் போல் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்ப்பு பெறுகிறது. நிவின் பாலி நடிப்பில் வெளியான மலையாளப் படமான நேரம்’ நேரடி தமிழ்ப்படத்தைப்போல் இங்கே வெளியானது. இதே பாணியில் துல்கர் சல்மான் நடித்த சோலோ என்ற மலையாளப்படத்தை நேரடி தமிழ்ப்படமாக வெளியிட்டனர்.

நடிகர் நிவின் பாலியின் ரிச்சி படம் டிசம்பர் 8-ஆம் தேதி ரிலீஸ்..?

ஆனால் இந்த இரண்டு படமும் பெரிதாக ஓடவில்லை. அதே போல் தான் நிவின் பாலி நடிப்பில் திரைக்கு வர இருக்கும் படம் ரிச்சி, அறிமுக இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நட்டி நட்ராஜ், ஸ்ரதா ஸ்ரீநாத் என தமிழுக்கு அறிமுகமான முகங்களும் நடித்திருக்கிறாகள். மேலும் இந்த படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் கன்னட படமான ‘உளிடவரு கண்டண்டே’ என்ற படத்தின் ரீ-மேக் படமாகும்.