உடலின் மேல் ஏறிய ரயில்!! சிரித்துக் கொண்டு வெளியே வரும் நபர்!! (வைரலாகும் காணொளி)

வட இந்தியாவின் உத்திரப் பிரதேசம் மாநிலம் டியோரியோ பங்காத் என்ற ரயில் சந்திப்பில் சரக்கு ரயில் ஒன்று புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலுக்கு கீழே சென்று ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.இதனையடுத்து, அங்கு இருந்தவர்கள் ரயில் கிளம்பபோகிறது என்று சொன்னபோதும் இவர் காதில் வாங்காமல் தைரியமாக ரயிலுக்கு அடியில் சென்று இருக்கிறார்.

அவர் உள்ளே சென்ற அடுத்த நொடியில் ரயில் புறப்பட தொடங்கியது. உடனடியாக சுதாரித்து கொண்ட அந்த நபர் ரயிலுக்கு அடியில் ஆடாமல் அசையாமல் அப்படியே படுத்துள்ளார்.

ரயில் சென்ற பின் வெளியே வந்த அவர் சட்டையை துடைத்துக் கொண்டு சிரித்து இருக்கிறார். இவரின் இந்த செயல் படம்பிடிக்கப்பட்டு சமூகவளைதளங்களில் வைராலகி வருகின்றது.