தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தலை எதிர்வரும் 27 ஆம் திகதி விடுக்கமுடியாதென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் எச்.ஹூல் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இதேவேளை உள்ளூரட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் காரணமாக தேர்தலுக்கான வேட்புமனுக்கோரும் அறிவித்தலை எதிர்வரும் 27 ஆம் திகதி விடுக்கமுடியாதென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் எச்.ஹூல் தெரிவித்துள்ளார்.