நடிகை தீபிகாவின் பத்மாவதி படத்திற்கு தடை விதித்த மத்தியபிரதேச அரசு..!

நடிகை தீபிகாவின் பத்மாவதி படத்திற்கு தடை விதித்த மத்தியபிரதேச அரசு..!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் படம் பத்மாவதி. சித்தூர் மகாராணி பத்மாவதியின் வாழ்கை வரலாறு பற்றிய படம் தான் இது. இந்தப் படத்தில் ராஜபுதனத்து மகாராணியான பத்மாவதி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்திர சமூகத்தினர் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை தீபிகாவின் பத்மாவதி படத்திற்கு தடை விதித்த மத்தியபிரதேச அரசு..!

இந்த நிலையில் ராஜபுத்திர சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்கள் நேற்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகானை சந்தித்து பேசினார்கள். அப்போது பத்மாவதி படத்திற்கு மத்திய பிரதேசத்தில் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இது குறித்து பேட்டியளித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியதாவது: “பத்மாவதி படத்தில் வரலாறு திரிக்கப்பட்டிருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. மாநில மக்களின் உணர்வுகளை பாதிக்கும் பத்மாவதி படத்திற்கு தடை விதிக்கப்படுகிறது” என்று கூறினார்.