ஒரு முறை மின்சாரம் நிரப்பினால் (charge) 500 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய, இலத்திரணியல் வாகனம் ஒன்று, அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது, எலக்ட்ரிக் செமி-ட்ரக்(electronic-seme-trucks) என அழைக்கப்படுகிறது.
கலிபோர்னியாவின் ஹாவ்தோர்ன் பகுதியில், டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk) இதனை அறிமுகம் செய்து வைத்துள்ளதோடு, இந்த இலத்திரனியல் வாகனம் குறித்த விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதன் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், செயற்திறன், இயக்கம் ஆகியவை குறித்து வடிவமைப்பாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மின்சாரம் நிரப்பி பயன்படுத்தக்கூடிய இந்த இலத்திரணியல் வாகனமானது, 30 நிமிடங்களில் 80 சதவீதத்தை அடைந்துவிடும் என்று கூறியுள்ளனர்.
மேலும், 20 விநாடிகளில் 60 மைல் வேகத்தை தாண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த எலக்ட்ரிக் செமி-டிரக்கின் விலை மற்றும் எதிர்கால உற்பத்தித் திட்டங்கள் குறித்து நிறுவனம் இதுவரை தகவல் வௌியிடவில்லை.
இவ்வகை இலத்திரனியல் வாகனம் சந்தைக்கு வந்தால், சரக்குப் போக்குவரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிறுவனத்தினரால் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






