டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பரிசுத்தொகை மூலம் 720 கோடி ரூபா சம்பாதித்து டைகர் வூட்ஸை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். டென்னிஸின் உயரிய தொடரான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 19 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
தற்போது வரை 95 பட்டங்கள் வென்றுள்ள பெடரர், பரிசுத் தொகை மூலம் பலகோடி ரூபா சம்பாதித்துள்ளார்.
உலகில் உள்ள பிரபலங்களின் வருமானம், அவர்களின் சொத்து மதிப்புகளை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை விளையாட்டில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதுவரை உலகின் பணக்கார விளையாட்டாக கருதப்படும் கோல்ப் விளையாட்டின் மன்னனாக கருதப்பட்ட அமெரிக்காவின் டைகர் வூட்ஸ் முதல் இடத்திலிருந்தார். தற்போது டைகர் வூட்ஸை பின்னுக்குத் தள்ளி ரோஜர் பெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ரோஜர் பெடரர் இதுவரை 1800 கோடி ரூபா சம்பாதித்து முதலிடத்தில் உள்ளார். டைகர் வூட்ஸ் 1700 கோடி ரூபா சம்பாதித்து 2ஆ-வது இடத்தில் உள்ளார்.







