டிரம்ப் உதட்டை நெளித்துக்கொண்டு தண்ணீர் குடித்த சம்பவம்சம்பவமானது, அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்க ஜனாதிபதியான  டிரம்ப்  தண்ணீர் குடிக்க,  உதட்டை,  போத்தலின்  வாயின் அருகே கொண்டு வரும்போது ஒரு மாதிரியாக நெளித்துக்கொண்டு,  தண்ணீர் குடித்த சம்பவமானது, அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதட்டை    நெளித்துக்கொண்டு    தண்ணீர்    குடித்த   டிரம்ப் !

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் ஆசிய நாடுகளில் 12 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நாடு திரும்பிய பின்னர், தான் மேற்கொண்ட சுற்றுப்பயணம் தொடர்பாக, நேரடி உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது, அவருக்கு திடீர் தாகம் ஏற்பட்டது.

அவர் தண்ணீர் குடிக்க போத்தலை   உதட்டினருகே கொண்டு வரும்போது, ஒரு மாதிரியாக நெளித்துவிட்டு,  பின்னர் தண்ணீர் குடித்தார். இது அநாகரீகமாக செயல் போல, அங்கிருப்பவர்களிற்குத் தோன்றியது.

குடியரசு கட்சியில் வேட்பாளராக  டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நேரத்தில், அவருக்கு எதிராக அந்த கட்சியில் செனட் உறுப்பினர் மார்கோரூபியோ போட்டியிட்டார்.

அவர் 2013 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோது, இதேபோல அநாகரீகமான முறையில் தண்ணீர் குடித்தார்.  அடுத்த தடவை மார்கோரூபியோ குவளையில் தண்ணீர் வைத்துக் கொண்டுவந்து குடிக்கட்டும். அவருடைய நடவடிக்கைகள் எதிர் நிலையை ஏற்படுத்திவிடும் என்று  டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டர்  பக்கத்தில், கேலி செய்து, கருத்து வெளியிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த, தேர்தல் பிரசாரத்தின்போதும் டொனால்ட் டிரம்ப் தண்ணீர்ப் போத்தலை  எடுத்து மார்கோரூபியோ போல தண்ணீரை குடித்து கேலியாகப் பேசினார். பின்னர் அந்த தண்ணீர் போத்தலை அங்கும் இங்கும் வீசினார். இறுதியாக போத்தலை மேடையிலேயே தூக்கி எறிந்தார்.

இந்நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் அநாகரீகமான முறையில் டொனால்ட் டிரம்ப் தண்ணீர் குடித்திருந்தமையை, அமெரிக்க பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மார்கோரூபியோ சம்பவத்துடன் ஒப்பிட்டு செய்திகள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.