பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் சில மாதங்கள் முன்பு வெளியாகி இந்தியா மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் பேசப்பட்ட படம் பாகுபலி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பெரிய ஹிட் கொடுத்தது. இதனால் அந்த படத்தில் நடித்த அணைத்து பிரபலங்களுக்கும் நல்ல புகழ் கிடைத்தது. பல விருதுகளை வாங்கியது இந்த படம். இந்த படத்தில் பிரபாஸிற்கு கதாநாயகியாக அனுஷ்கா மற்றும் தமன்னா நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் மூலம் பிரபாஸிற்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் சேர்ந்தனர்.
பிரபாஸை திருமணம் செய்து கொள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் காத்திருப்பதாக பாகுபலி 2 படம் வெளியான சமயத்தில் ஒரு செய்தி வந்தது. மேலும், தற்போது ஜெர்மனியில் பிரபாஸின் தீவிர ரசிகையாக இருக்கிறார் ஒருவர். எந்தளவுக்கு என்றால் பிரபாஸின் உருவத்தை தனது முதுகில் டாட்டூ போடும் அளவிற்கு அவர் மீது பைத்தியமாக உள்ளார். தற்போது இந்த போட்டோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.