மலிவு விலையில் கிடைக்கும், மத்திய அரசின், ‘ஜெனிரிக்’ மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
மக்களை அழிக்கும் மது, மலிவாக கிடைக்கும் இத்தேசத்தில், மக்களைக் காக்கும் மருந்துகள் மலிவாக கிடைப்பதில்லை.
ஏழையின் எட்டாக் கனிகளில் தரமான மருந்துகளும் அடக்கம். எனவே, அனைத்து உயர்தர மருந்துகளையும் குறைந்த விலையில் வழங்கி ஏழைகளின் உயிர் காக்க உருவாக்கப்பட்டதே ஜெனரிக் மருந்துகள்.
அரசால் காப்புரிமை வழங்கப்படாத மருந்துகள் (Generic medicine) அதாவது பொது மருந்தாக விற்கப்படும்.
எனவே இந்தியாவில் இதன் விலை குறைவு.இப்படி எந்த மருந்துக்கும் காப்புரிமை வழங்கப்படவில்லையெனில் எல்லா மருந்தும் ஜெனரிக் ஆகும்.
மாதந்தோறும் மருந்துகளுக்கு என 500 ரூபாய் செலவு செய்தவர்களுக்கு, தற்போது, 100ல் இருந்து, 120 ரூபாய்க்குள் தான் செலவாகிறது.
இந்த மருந்துகள் அனைத்தும் உலக சுகாதார மையம், மத்திய அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றே தயாரிக்க முடியும்.
எனவே, எல்லா மருந்துகளும் தரமானவை. தற்போது, நாடு முழுவதும், 2,802ம், தமிழகத்தில், 208 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
‘ஜெனிரிக்’ மருந்து திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
இந்தியாவில் மருத்துவ வசதி குடியரசு தலைவருக்கு கிடைப்பதைப்போலவே சாதாரண கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
பாரசிட்டமோல் மாத்திரை கம்பெனி பெயரில் 5 ரூபாய், ஆனால், ஜெனரிக் மெடிசனாக வாங்கினால் 50 பைசா எனவே ஜெனரிக் மெடிசன் வாங்கும் திறனை அதிகமாக்க வேண்டும்.
மருத்துவ துறையும் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், மருந்தகங்களின் மூலம் கிடைக்கும் கொள்ளை இலாபம் பறிபோய் விடும் என்று இதனை முடக்கி விடவே முயற்சிக்கின்றன.
அதையும் தாண்டி இன்று மக்கள் கூட்டம் ஜெனரிக் மருந்து கடைகளை நோக்கி படியெடுத்து வருகிறது.







