
நடிகை நந்திதா சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார் அந்த சில படங்கள் மூலமே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன்பின், அவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை. அதற்கு பிறகு அவர் நடித்த முண்டாசு பட்டி போன்ற படம் நன்றாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரியளவில் மதிப்பு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து, இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்த நந்திதா, காத்திருப்போர் பட்டியல், உள்குத்து ஆகிய படங்களில் பிரதான ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும், காத்திருப்போர் பட்டியல், ஒரே நாளில், ஒரே இடத்தில் நடக்கும் பலதரப்பட்ட சம்பவங்களை மையமாக வைத்து, தயாராகியுள்ளதாம். இதில், சச்சின் என்பவர், ஹீரோவாக நடிக்கிறார். நந்திதாவிடம் இது குறித்து கேட்டால், எனக்கு வாய்ப்பில்லை என, யார் சொன்னது, இப்போது என் கைவசம், 6 படங்கள் உள்ளன. வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் நந்திதா.






