பெண் கான்ஸ்டபிளை வைத்து மசாஜ் செய்த உதவி இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கட்வாலா மாவட்டத்தில் உள்ள ஜோகுலம்பா ஆயுதப்படையில் துணை உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஹசன்.
இவர்தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏனெனில் ஆயுதப்படை அலுவலகத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிள் ஒருவர் ஹசனுக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தெலுங்கு டிவி சேனல்களில் திரும்ப திரும்ப ஒளிபரப்பான நிலையில் வீடியோ குறித்து விசாரிக்க சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டு இருந்தார். முதல்கட்ட விசாரணை அம்சங்கள் தற்போது வெளியே வந்துள்ளன.
விசாரணையில் கிடைத்த தகவல் இதுதான்: சில மாதங்களுக்கு முன்னர் அலுவலகத்தில் முதுகுவலி காரணமாக பெண் போலீஸை மருந்து தேய்த்து விட ஹசன் கூறியதன் பேரில், அந்த கான்ஸ்டபிள் மருந்து தேய்த்ததாக கூறப்படுகிறது.






