பாதாம் பருப்பு, வாதுமை, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலை போன்ற கடலை வகைகளை வாரத்திற்கு இரு தடவைகள் உண்பது இருதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை 25 சதவீதம் குறைப்பதாக அமெரிக்க ஹர்வார்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வானது 200,000 க்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர் களில் பலர் 30 வருடங்களுக்கு மேற் பட்ட காலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
அனைத்து வகையான கடலை வகைகளும் உலகின் மிகவும் அபாயகரமான நோயாகவுள்ள இருதய நோயைத் தடுக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளதாக மேற் படி ஆய்விற்கு தலைமை தாங்கிய மருத்துவ கலாநிதி மார்தா கவாஸ்ச் பியறி தெரிவித்தார்.
அத்துடன் இந்தக் கடலை வகைகளில் அதி உயர் போஷணை காணப்படுகின்ற போதும் அவற்றை உண்பதால் உடல் நிறை கூடுவதற்கான சான்றும் தமது ஆய்வில் கண்டறியப்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்படி கடலை வகைகளை வாரத் திற்கு இரண்டு அல்லது 3 தடவை கள் கை நிறைய எடுத்து உண்பது இருதய
நோய்கள் மற்றும் இருதய குருதிக் குழாய்கள் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயத்தை முறையே 23 சதவீதத்தாலும் 19 சதவீதத்தாலும் குறைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மேற்படி கடலை வகைகள் இருதய நோய்களை மட்டுமல்லாது புற்று நோய்கள், நீரிழிவு, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் மூளைச் சிதைவு நோய் போன்ற உயிராபத்தான நோய்களுக்கு எதிராகவும் பாதுகாப்பைத் தருவதாக அவர்கள் கூறு கின்றனர். மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க இருதயவியல் கல்லூரியின் ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள்ளன.






