கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கோடிக்கணக்கான டொலர்கள்!

சட்டவிரோதமாக 324,48000 அமெரிக்க டொலர்களை மலேசியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த 4 வர்த்தகர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பணத்தை அவ்வாறு கொண்டு செல்வதாக சுங்க பிரிவிற்கு அறிவிக்கவில்லை என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் 35 – 50 வயதுக்கு உட்பட்ட மலேசிய வர்த்தகர்கள் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை 6.30 மணியளவில் மலேசிய கோலாலம்பூர் நகரத்திற்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.வீ 314 என்ற விமானத்தில் இந்த பணத்தை அவர்கள் கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

அவர்ங்கள் வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்ட விசேட வகுப்பில் பயணிப்பதற்கு ஆயத்தமாகியதோடு சட்டவிரோதமாக இந்த பணத்தை மலேசியாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

download (28)