குரங்கினால் கீழே போடப்பட்ட தேங்காய் ஒன்று 09 வயது சிறுவனின் தலையில் விழுந்ததனால் குறித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குரங்கு விழுத்திய தேங்காய் குறித்த சிறுவனின் தலையில் விழுந்ததனால் படுகாயமடைந்த சிறுவன் உணர்விழந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த சிறுவன் குருநாகல் லக்தஸ் டி மெல் மகா வித்தியாலயத்தில் தரம் 04 இல் கல்வி கற்று வருபவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, குறித்த சிறுவனுக்கு மூளை அறுவைச் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனளிக்கவில்லை.
இதேபோன்று பலர் இவ்வாறு குரங்குகளின் அட்டகாசத்தினால் காயமுற்றுள்ளனர் என்றும் அதிகாரிகளிடம் குரங்குத் தொல்லைகள் குறித்து முறையிட்டும் செவிடன் காதில் சங்கு ஊதியது போன்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.






