மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா – சீனா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

201711051718103011_1_5hockey001-s._L_styvpf மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் 201711051718103011 1 5hockey001 s

ஆனால், 47-வது நிமிடத்தில் சீன வீராங்கனை டியான்டியன் லுவோ பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு நாட்டு வீராங்கனைகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

201711051718103011_2_5hockey002-s._L_styvpf மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் 201711051718103011 2 5hockey002 s

பெனால்டி ஷூட்டில் இரு அணிகளுக்கும் தலா ஐந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா நான்கு கோல்கள். இதனால் சடன்டெத் முறை பயன்படுத்தப்பட்டது..

இதில் இந்திய வீராங்கனை ராணி முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். சீனா வீராங்கனை தனது வாய்ப்பை தவற விட்டதால் இந்தியா 5-4 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக இந்தியா ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இதற்கு முன் 2004-ல் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 2018-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிப் பெற்றுள்ளது.

இந்த தொடரில் இந்திய பெண்கள் அணி தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.