மாத்தளையில் சோகம்! எட்டு பேரினதும் சடலங்கள் மீட்பு!

மாத்தளையில் ஆற்றில் குளித்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போன எட்டு பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று வரையில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் அரை கிலோமீற்றர் தொலைவில், 7 மற்றும் 12 வயதான இரு பெண் பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தாத்தன்டிய பிரதேசத்தில் இருந்து வருகைத்தந்த 12 பேர், மாத்தளை, லக்கல – எடன்வல, தெல்கமுவ ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது 8 பேர் காணாமல் போனயிருந்தனர்.

இந்த சம்பவம் கடந்த நான்காம் திகதி நடைபெற்றிருந்த நிலையில் குறித்த பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் கடற்படை சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று வரையில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எட்டு பேரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமையானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது சடலங்களாக மீட்கப்பட்டவர்கள்

கிங்சிலி ரத்நாயக்க (வயது – 40)

சந்திராகாந்தி (வயது – 59)

வினுக்கி ரத்நாயக்க (வயது – 13)

ஹிருனி ரத்நாயக்க (வயது – 4)

ரவிந்திர லசந்த (வயது – 39)

ருவனி டில்ருக்ஷி (வயது – 38)

ரிஷாதி வீகிஷா (வயது – 12)

சந்துனி (வயது – 12)

Captureczc Capturevcb Capturefcxdvdfc Capturecvfd Capturedfs Capturecxf Capturexdfc Capturedsfg