வித்யா வழக்கில் மற்றும் சிலரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

யாழ். மாணவி வித்யா படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லக் காரணமாக இருந்த மற்றும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

viiiiiiiiiiiiiiiiiiiiiiii-720x450-720x450இதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.