அரியாலை இளைஞன் கொலை! சிறப்பு அதிரடிப் படை புலனாய்வாளர்கள் கைது!!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், வசந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையின் புலனாய்வு அதிகாரிகள் இருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமில் இருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டவை என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கி, முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவை ஒரு சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்டினருந்தன.

விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

625.500.560.350.160.300.053.800.900.160.90-1-490x315