லண்டனில் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக மோதிய கார்: பலர் படுகாயம்

லண்டனில் நடைபாதையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது கார் ஒன்று பயங்கரமாக மோதியதில் பலர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Covent Garden பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி அளவில் நடைபாதையில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று Black cab கார் ஒன்று அங்கிருந்த மக்கள் மீது மோதியதால், பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மெட்ரோ பொலிசார் தெரிவிக்கையில், காருக்கு கீழே ஒரு நபர் சிக்கியிருப்பது போல் தெரிகிறது, அதனால் அவரை மீட்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்பதை உறுதியாக கூற முடியாது எனவும், இது ஒரு போக்குவரத்து மோதல் தானே தவிர பயஙகரவாத தாக்குதலாக இருக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தை ஏற்படுத்திய டிரைவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அமெரிக்காவின் மான்கெண்ட்டன் பகுதியில் தீவிரவாதி ஒருவன் டிரக் வைத்து பொதுமக்கள் மீது மோதியதில் 8 பேர் பலியாகினர், 11 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Capturebx b Capturevxc