இன்றைய ராசிபலன் (29.10.2017)

இன்றைய ராசிபலன்

  • மேஷம்

    மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: மாலை 3.36 மணிவரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

  • கடகம்

    கடகம்: பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். மாலை 3.36 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆடை, அணிகலன் சேரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். அமோகமான நாள்.

  • துலாம்

    துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். தாயாருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • தனுசு

    தனுசு: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். விருந்தினர் வருகையால் வீடுகளை கட்டும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது முடியும் நாள்.

  • மகரம்

    மகரம்: மாலை மணி 3.36 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர்களை குறைக்கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். மாலை மணி 3.36 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.