தயாரிப்பளர் அபினேஷ் இளங்கோவனுக்கும், ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரனின் மகள் நந்தினிக்கும் இன்று திருமணம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூலை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சென்னை திருவான் மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா திருமண மண்டபத்தில் அவர்களின் திருமணம் இடம்பெற்றது.
இந்த திருமண விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகை ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அபி அன்ட் அபி பிக்சர்ஸ் தயாரிப்பு குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும், துணை தலைவராகவும் உள்ள அபினேஷ் இளங்கோவன் இறைவி, காதலும் கடந்து போகும், பாம்புச் சட்டை உள்ளிட்ட படங்களை அபி அன்ட் அபி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.









