கனடாவில் ஹமில்ரன் குடியிருப்பு பகுதில் திடீரென வீடொன்று சரிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த ஒருவர் அதற்குள் அகப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
கனடா ஹமில்ரன் கிப்சன் அவெனியுவில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சரிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளிற்குள் அகப்பட்டடிருந்த நபரை தீயணைப்பு பிரிவினர் காப்பாற்றி வெளியே எடுத்துள்ளதுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
வீடு திடீரென சரிந்ததற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் வீடு திடீரென வெடித்திருக்கலாம என கருதப்படுகின்றது.
எனினும் இது ஓரு பாரிய தகர்வென ஹமில்ரன் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.