கடந்த இரண்டு வருடங்களாக ஒத்திவைக்கப்பட்டுவந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த தகவலை தேசிய சகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் வெளியிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தும் திகதி தொடர்பாக ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றைய தினம் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
அலரிமாளிகையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.