பிரதமரின் பொருளாதார கொள்கை பிரகடனம் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதாகும். 2020 இல் நாட்டை வறுமை அற்ற நாடாக மாற்றுவதற்குரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் இருந்து வெளிப்படவில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.







