சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் தல தளபதி ரசிகர்களின் வாக்கு வாதங்களை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
இவர்களின் படங்களின் படப்பிடிப்பில் ஆரம்பித்து தியேட்டர்களில் ஓடி முடியும் வரை விமர்சனங்களுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் மெர்சல் படம் தீபாவளி அன்று பல தடைகளை சந்தித்து ஓடி கொண்டிருக்கும் நிலையில் பா.ஜ.க வினரால் படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்கக்கோரி கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இதனால் விஜய் மீதும் அட்லீயின் மீதும் வழக்கு தொடரப்படும் எனவும் தமிழிசை சௌந்தரராஜன், பொண் ராதா கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.