தாங்காத தினகரன்… தள்ளாடிய அதிமுக… தேனியில் நடந்த விபரீதம்..?

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்த பின், டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது.

அதிமுகவை தொடங்கிய தினமான 1972ம் ஆண்டு 17ம் தேதியை அதிமுகவினர் வருடம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

0-61தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகில் தேரடியில் அ.தி.மு.க அம்மா அணியின் சார்பில் கட்சியின் 46 -வது தொடக்க விழா மேடை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க அம்மா அணியின் சார்பில் கட்சியின் 46 -வது தொடக்க விழா இன்று தேனி மாவட்டதில் அந்த அணியின் தங்க தமிழ்ச் செல்வன் தலைமையில் நடைபெறவிருந்தது. இதில் கதிகாமு உள்ளிட்ட அம்மா அணியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அனைவரும் மேடை ஏறினதும் யாரும் எதிர்பாரத விதமாக விழா மேடை ஒருபுறம் சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. விழா தொடர்ந்து சரிந்த மேடையிலே நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா பற்றி, முதல்வர் எடப்பாடி தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகாத நிலையில், டிடிவி தினகரனின் அணியின் சார்பில் நடத்தப்படும் இந்த விழா அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.