வழக்குகளை அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு இடைக்கால தடை வேண்டும்!

தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தேசிய இனப்பிரச்சினை தீர்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு தடையாக இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உட்பட தமிழ் மக்கள் பிரதிநிதிகளை ஜனாதிபதி இன்று சந்தித்த போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புலிகளை வெட்ட வேணும் தமிழனை கொத்த வேணும்

புலிகளை வெட்ட வேணும் தமிழனை கொத்த வேணும்ஸ்ரீலங்காவில் சர்வதேச தரங்களுக்கு அமையாத பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் மற்றும் அனுராதபுர சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.
அரசாங்கத் தரப்பில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

புலிகளை வெட்ட வேணும் தமிழனை கொத்த வேணும்59e8f7b2cfec5-IBCTAMILஅவர்களைத் தவிர சட்டமா அதிபர் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம், உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என கோரியதாக குறிப்பிட்டார்.