ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
வங்கதேசத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் A பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அபாரமாக ஆடிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி A பிரிவில் முதல் இடத்தை பிடித்து அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா சார்பில் சிங்கலென்ஸான சிங், ராமந்தீப் சிங், ஹர்மான்ப்ரீட் சிங் ஆகியோரும் பாகிஸ்தானுக்காக அலி ஷான் தலா ஒரு கோல் அடித்தனர். இப்போட்டியின் முடிவில் A பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. மேலும் இந்த ஆசிய கோப்பையை வெற்றிபெறும் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.