500 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு!

பண்டிகைக் காலத்தில் 500 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

thumb_large_grocery-items-sri-lanka

லங்கா சதொசவில் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை இந்த விலைக்கழிவு அமுலில் இருக்கும் என அமைச்சர் கூறியதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒவ்வொருபிரதேச செயலகப் பிரிவுகளிலும், தொடரூந்து நிலையங்களிலும், அரச நிறுவனங்களிலும், சதொச விற்பனைக் கிளைகளை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது.

அத்தோடு, தனியார் முகவர்களுடனும், சதொச கிளைகளை ஆரம்பிப்பது குறித்து ஆலோசித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சதொசவில் தற்போது தேங்காய் ஒன்று 65 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு 5 லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.